இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் உச்சம் தொடும் டெங்கு பாதிப்பு

15th Sep 2021 04:13 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது அம்மாநில மக்களை கவலை கொள்ள செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் டெங்குபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதால் தேவையான மருத்துவ வசதிகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிக்க | பாரம்பரியம் என்கிற பெயரில் கொன்று குவிக்கப்பட்ட 1500 டால்பின்கள்

காசியாபாத்தில் மட்டும் செவ்வாய்க்கிழமை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்தது. இதுதொடர்பாக பேசிய மருத்துவர் ராகேஷ் குப்தா 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து டெங்கு நோய் பதிவான சில மணிநேரங்களுக்குள் ஒருங்கிணைந்த மருத்துவக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் கான்பூரில் 103 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கான்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனில் நிகம்,  “காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 75-யிலிருந்து 100 நோயாளிகள் புறநோயாளிகள் பிரிவுக்கு வருவதாகவும், அவர்களில் 5 முதல் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா

காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை டெங்கு நோயாளிகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள்  மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (காசியாபாத்) தலைவர் டாக்டர் ஆஷிஷ் அகர்வால் கூறினார்.

 

Tags : Dengue Uttarpradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT