இந்தியா

தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்கத் தடை: தில்லி முதல்வர்

15th Sep 2021 01:21 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,

“தில்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக கடந்தாண்டை போலவே தீபாவளிக்கு பட்டாசு சேமிக்கவும், விற்கவும், வெடிக்கவும் இந்தாண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும்.

கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால், இந்தாண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்.”

ADVERTISEMENT

 

Tags : Arvind Kejriwal Crackers Banned Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT