இந்தியா

காட்டில் கால்பந்து விளையாடிய கரடிகள்

14th Sep 2021 03:11 PM

ADVERTISEMENT

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இரு கரடிகள் கால்பந்து விளையாடும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உமர்கோட் பகுதியிலுள்ள வனப்பகுதி அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.

அப்போது பந்து காட்டிற்கு அருகில் சென்று விழுந்த நிலையில், அந்த இடத்திற்கு வந்த இரண்டு கரடிகள் சிறுவர்களைப் போன்று பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தன.

ADVERTISEMENT

படிக்கஆப்கனில் இருந்து 1.24 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்பு: அமெரிக்கா தகவல்

கால்பந்தை முதல் முறை கண்ட கரடிகள் பந்தைக் கண்டு முதலில் அஞ்சிய நிலையில், பின்னர் பந்தை உதைத்து உதைத்து விளையாடத் தொடங்கின.

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த விடியோக் காட்சிகளை ஒடிசா வனத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

Tags : odisha Bears football forest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT