இந்தியா

உ.பி., கோவா பேரவைத் தேர்தலில் சிவசேனை போட்டி: சஞ்சய் ரௌத்

12th Sep 2021 08:25 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசம், கோவா மாநிலங்களில் அடுத்தாண்டு வரவுள்ள பேரவைத் தேர்தலில் சிவசேனை போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரௌத் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து கூறியது:

"உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் சிவசேனை 80 முதல் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும். கோவாவில் 20 தொகுதிகளில் சிவசேனை போட்டியிடும். மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புகள் சிவசேனை ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். கோவாவில் மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணியைப் போல் ஒரு யுக்தியை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு மாநிலங்களிலும் எங்களுக்கு நிர்வாகிகள் இருக்கின்றனர். வெற்றியோ, தோல்வியோ நாங்கள் போட்டியிடுவோம்.

ADVERTISEMENT

தேசியத் தலைவர் ஆவதற்கான திறன் உத்தவ் தாக்கரேவுக்கு இருக்கிறது. அவர் ஒரு தேசியத் தலைவர்."

உத்தரப் பிரதேசத்தில் 403 பேரவைத் தொகுதிகள் உள்ளன. கோவாவில் 40 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

Tags : shiv sena
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT