இந்தியா

உத்தரப் பிரதேசம், கோவா தேர்தல்களில் களமிறங்கும் சிவசேனை

12th Sep 2021 02:58 PM

ADVERTISEMENT

அடுத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், கோவா சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 தொகுதிகளிலும் கோவாவில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. கோவாவில் மகா விகாஸ் அகாதி போன்ற கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எங்களுக்கு தொண்டர்கள் உள்ளனர். எனவே, வெற்றியோ தோல்வியோ போட்டியிடவுள்ளோம்" என்றார்.

இதையும் படிக்ககுஜராத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? மூத்த பாஜக தலைவர்கள் சந்திப்பு

ADVERTISEMENT

கடந்த 2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, முதல்வர் பொறுப்பு தராததால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனை முறித்து கொண்டது. பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவருகிறது.

Tags : shiv sena uttar pradesh Goa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT