இந்தியா

நாடு முழுவதும் 202 நகரங்களில் இன்று நீட் தேர்வு

12th Sep 2021 12:51 PM

ADVERTISEMENT

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நுழைவு தேர்வு இன்று நடைபெறவுள்ளது. கரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் 202 நகரங்களில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

திட்டமிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மற்ற படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் நடைபெறும் தேதிகளிலேயே நீட் தேர்வு நடத்தப்படுவதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "மொத்தம் 16 மாணவர்கள் நீட் தேர்வுகளை எழுதவுள்ளனர். சில மாணவர்களின் கோரிக்கையின் பேரில் நீட்டை ஒத்திவைக்க முடியாது" என தெரிவித்திருந்தது.

கரோனாவுக்கு மத்தியில் தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தேசிய தேர்வு முகமை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | குஜராத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? மூத்த பாஜக தலைவர்கள் சந்திப்பு

தேர்வு அறைகளில் நுழைவதற்கு முன்பு, மாணவர்களுக்கு என் 95 முகக்கவசம் வழங்கப்படவுள்ளது. சுத்திகரிப்பு பாட்டில்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க ஆடை கட்டுப்பாடு, சோதனை நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : NEET national testing agency
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT