இந்தியா

முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தது ஏன்? மனம் திறக்கும் விஜய் ரூபானி

11th Sep 2021 04:18 PM

ADVERTISEMENT

புதிய தலைமையின் கீழ் குஜராத்தின் வளர்ச்சி பாதை தொடர வேண்டும் என முதல்வர் பதவியிலிருந்து விலகிய விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "குஜராத்தின் வளர்ச்சி பயணம் புதிய ஆற்றுலடனும் உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் முன்னோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து கொண்டே, குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினேன்.

கட்சி பணியாளனாக இருந்த எனக்கு குஜராத் முதல்வர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். பதவிக்காலம் முழுவதும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது. குஜராஜ் வளர்ச்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியில் பங்காற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிக்க | குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

ADVERTISEMENT

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை திடீரென இன்று மாலை (சனிக்கிழமை) ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பொறுப்பிலிருந்து ரூபானி விலகியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT