இந்தியா

கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா தொற்று

11th Sep 2021 07:49 PM

ADVERTISEMENT

கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தது:

"கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,31,792 ஆக உள்ளது.

இதையும் படிக்க | மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

ADVERTISEMENT

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டும் விகிதம் 15.19 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,34,861 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,484ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22155 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT