இந்தியா

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்

11th Sep 2021 09:27 AM

ADVERTISEMENT


உத்தரகண்ட்: உத்தரகண்ட்டில் சனிக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமாத்தில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

கடந்த மாதம் நாட்டில் முதல்முறையாக 'உத்தரகண்ட் பூகம்ப எச்சரிக்கை' என்ற பெயரில் நிலநடுக்கம் எச்சரிக்கை குறித்த செயலியினை உத்தரகண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : நிலநடுக்கம் earthquake Joshimath Uttarakhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT