இந்தியா

இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தனி அறையா?: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

8th Sep 2021 03:42 PM

ADVERTISEMENT


ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை நடத்துவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. 

இதனைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதற்றத்தை தவிர்க்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர்.

ADVERTISEMENT

ஜார்கண்ட் சட்டப்பேரவை வளாகத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை வேளையில் நமாஸ் செய்வதற்கு ஏதுவாக தனி அறை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

படிக்க தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர்வதற்கு அனுமதி: மத்திய அரசு

இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ அனுமான்', 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் பாஜக தொண்டர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : legislative assembly Jharkhand BJP MLA BJP leaders
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT