இந்தியா

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளித்த விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு

8th Sep 2021 03:12 AM

ADVERTISEMENT

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளித்தது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் படையினருக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அடைக்கப்பட்டிருந்தப்போது அவருக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, ‘சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என சென்னையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கீதா என்பவா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இது தொடா்பான வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின்போது, சிறப்புச் சலுகை அளித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புப் படை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ‘குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான அனுமதிக்காக காத்திருக்கிறோம்’ என்று வாதிட்டாா்.

குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், 30 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும் அதற்குள் உரிய அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் குற்றப்பத்திரிகை மீதான அறிக்கையை 30 நாள்களுக்குள் ஊழல் தடுப்புப் படையினா் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், அக். 8-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த வழக்கின் விசாரணையின்போது கா்நாடக உள்துறை முதன்மைச் செயலாளா் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என நீதிமன்றம் எச்சரிித்தது.

Tags : sasikala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT