இந்தியா

தில்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தடை

8th Sep 2021 01:45 PM

ADVERTISEMENT

தில்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தில்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை,  ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படவில்லை என்பதை மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள் உறுதி செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | 28 வயதில் மறைந்த ஸ்வீடன் இசைக்கலைஞர்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்

Tags : ganesh-chaturthi விநாயகர் சதுர்த்தி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT