இந்தியா

பவானிப்பூர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் மம்தா

8th Sep 2021 05:27 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி, பவானிப்பூர் இடைத்தேர்தலுக்கு மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்யவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்கநான் பவானிபூரில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? சுவேந்து அதிகாரி

ADVERTISEMENT

மேலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா எதிலும் தோல்வி அடையவில்லை என்பதும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது. 
 

Tags : mamata bypoll
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT