இந்தியா

நிபா தீநுண்மி: கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்துதல்

8th Sep 2021 02:02 PM

ADVERTISEMENT

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நிபா தீநுண்மியால் 68 பேரை தனிமைப் படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தீநுண்மியால் கோழிக்கோடு மாவட்ட த்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுவனின் தொடர்பிலிருந்த அனைவருக்கும் நிபா பரிசோதனை செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வீணா ஜார்ஜ் கூறியது:

ADVERTISEMENT

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் நிபா தீநுண்மி தனிமைப்படுத்தல் பிரிவில் 68 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் யாருக்கும் தொற்றில்லை என தெரியவந்துள்ளது.  

நேற்று 10 பேருக்கு தொற்றில்லை என தெரியவந்தது. மேலும், 21 பேரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

Tags : Veena George Nipah Virus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT