இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி

7th Sep 2021 10:06 AM

ADVERTISEMENT

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வானது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா குறைந்து வருவதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அதே நாளில் பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டுமென விரும்பும் மாணவர்களுக்கான மறுத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரை பதிவில்,

ADVERTISEMENT

மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT