இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,898 பேருக்கு கரோனா

7th Sep 2021 07:20 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,898 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 3,898 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,581 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 63,04,336 பேர் குணமடைந்துள்ளனர். 1,37,897 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 47,926 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 97.08 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதம்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT