இந்தியா

தொடரும் பெயர் மாற்றும் படலம்: அசாம் தேசிய பூங்காவின் பெயர் மாற்றம்?

2nd Sep 2021 11:23 AM

ADVERTISEMENT

அசாமில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை மாற்றும் வகையில் அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அசாமில் அமைந்துள்ள தேசிய பூங்காவின் பெயரிலிருந்து ராஜீவ் காந்தியின் பெயர் நீக்கப்படவுள்ளது. ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ஒராங்கா தேசிய பூங்கா என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ராயல் வங்காள புலிகள் அதிகம் இருக்கும் பூங்காக்களில் இதுவும் ஒன்று.

பெயரை மாற்ற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பழங்குடியின மற்றும் தேயிலை தோட்ட பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ஒராங்கா தேசிய பூங்கா என மாற்ற அமைச்சரவை முடிவு செய்தது. 

இதையும் படிக்கமூத்த பத்திரிகையாளர், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்

ADVERTISEMENT

தர்ராங்கில் அமைந்துள்ள பிரம்மபுத்திராவின் வடக்கு ஆற்றங்கரையில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்திய காண்டாமிருகம், ராயல் வங்காள புலி, குள்ள காட்டுப் பன்றி, காட்டு யானை, காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உடல்குரி மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

79.28 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா, கடந்த 1985ஆம் ஆண்டு, வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 1999ஆம் ஆண்டு, தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு, தேசிய பூங்காவுக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டது. 


 

Tags : assam national park Rajiv Gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT