இந்தியா

தலிபான்களை கொண்டாடுபவர்களா நீங்கள்?...உங்கள் கருத்தை மாற்ற வைக்கும் முதுபெரும் நடிகரின் விளக்கம்

2nd Sep 2021 01:16 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதை கொண்டாடவது ஆபத்தானது என முதுபெரும் நடிகர் நசிரூதின் ஷா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதை இஸ்லாமியர்கள் சிலர் இந்தியாவில் கொண்டாடவது ஆபத்தானது என முதுபெரும் நடிகர் நசிரூதின் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட விடியோவில், "ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது ஒட்டு மொத்த உலகுக்கே கவலை அளிக்கும் விதமாக உள்ளபோதிலும், காட்டுமிராண்டிகளை இந்திய இஸ்லாமியர்கள் சிலர் கொண்டாடுவது அதற்கு இணையான ஆபத்தான போக்கு

தங்களின் மதத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? அல்லது பழை காட்டுமிராண்டிதனத்தில் வாழ வேண்டுமா? என தலிபான்கள் மீண்டெழுந்திருப்பதால் மிகழ்ச்சி கொள்பவர்கள் தங்களை தானே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்துஸ்தானி இஸ்லாமுக்கும் உலகின் மற்ற பகுதிகளில் போதிக்கப்படும் இஸ்லாமுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் போதிக்கப்படும் இஸ்லாம் உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் இஸ்லாம் மதத்திலிருந்து வேறுப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிக்கஜோ பைடன், அஷ்ரஃப் கனி இடையேயான தொலைபேசி உரையாடல்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ஆப்கன் அரசு படைகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags : Naseeruddin Shah talibans
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT