இந்தியா

மிசெளரி: வார இறுதி நாள்களில் 15,000 பேருக்கு மட்டுமே அனுமதி

2nd Sep 2021 11:13 AM

ADVERTISEMENT

மிசெளரி சுற்றுலாத் தலங்களில் வார இறுதி நாள்களில் 15,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டேராடூன் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மிசெளரிக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இதையடுத்து  டேராடூன் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்,

மிசெளரி சுற்றுலாத் தலங்களில் வார இறுதி நாள்களில் 15,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அனுமதிக்கப்படும் அனைவரும் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயம் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : corona restrictions Mussoorie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT