இந்தியா

வாகனத்தில் உணவு உண்ணும்போது தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

2nd Sep 2021 02:56 PM

ADVERTISEMENT

கேரளாவில் சாலை அருகே வாகனத்தில் உணவு உண்ணும்போது தாய், மகன் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கொல்ல மாவட்டத்தில் சாலை அருகே 44 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அவரது 23 வயது மகனும் தங்களது  நான்கு சக்கர வாகனத்திற்குள்ளே அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் அவர்கள் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டித்த பலர், சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி இரவு, குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கொல்லம் பரவூர் காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து தாயும் மகனும் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு தப்பிக்க முயற்சித்தபோது கைது செய்தோம். இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம். 

இதையும் படிக்கஜோ பைடன், அஷ்ரஃப் கனி இடையேயான தொலைபேசி உரையாடல்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ADVERTISEMENT

பரவூர் கடற்கரை அருகே உள்ள சாலையில் வாகனத்திற்கு உள்ளேயே அமர்ந்து உணவு உண்ணும்போது தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றம்சாட்ட ஆஷிஷ் முதலில் தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியதாகவும் மகன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர். வாகனத்திலிருந்து வெளியேறிய மகன் மீது அவர் தாக்குதல் நடத்தினார். இறுதியாக, தாயின் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இருவருக்கும் காயம் ஏற்பட்டது" என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT