இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி காலமானார்

2nd Sep 2021 04:03 AM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி (91) புதன்கிழமை காலமானார்.

20 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஸ்ரீநகரில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார். அவரின் மறைவுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்த அவர், பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத்
அமைப்பை நிறுவினார். பின்னர், அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய அவர், 2020-இல் அப்பொறுப்பிலிருந்து விலகினார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் சாபோர் தொகுதி பேரவை உறுப்பினராக 1972, 1977, 1987-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT