இந்தியா

மத உணர்வுகளை தூண்டும் வகையிலான செய்திகளால் நாட்டுக்கு அவப்பெயர்: உச்ச நீதிமன்றம் கருத்து

2nd Sep 2021 01:41 PM

ADVERTISEMENT

சில ஊடகங்களில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செய்தி வெளியிடப்படுகிறது. அது நாட்டுக்கு அவப்பெயர் விளைவிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று தொடக்க காலத்தில், கரோனா பரவல் அதிகரிப்புக்கு தப்லீக் ஜமாத் மத கூட்டமே காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,  சில ஊடகங்களில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செய்தி வெளியிடப்படுகிறது. இது நாட்டுக்கு அவப்பெயர் விளைவிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

வழக்கின் விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா இதுகுறித்து மேலும் கூறுகையில், "அதிகாரமிக்கவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே செய்தி இணையதங்கள் கேற்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் அமைப்புகளுக்கு எதிராகவும் தாங்களுக்கு தோன்றியதை எழுதுகிறார்கள். பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இணையதளங்களுக்கு பொறுப்பே இல்லை. 

இதையும் படிக்கஜோ பைடன், அஷ்ரஃப் கனி இடையேயான தொலைபேசி உரையாடல்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ADVERTISEMENT

நாட்டில் நடைபெறும் அனைத்தையும் சில ஊடகங்கள் மதவாத ரீதியாக காட்டுகிறது. இதுதான் இங்கு பிரச்னை. நாட்டுக்கு இதனால் அவப்பெயர்" என்றார். 

அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மதவான கருத்துகள் மட்டுமல்ல திட்டமிடப்பட்ட பொய்யான செய்திகளும் வெளியிடப்படுகிறது" என்றார். 

தப்லீக் ஜமாத் மத கூட்டத்துடன் கரோனா பரவல் அதிகரிப்பை தொடர்புப்படுத்தி மதவாக கருத்து தெரிவித்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், "யூடியூப் பார்த்தால், உங்களுக்கே புரியும் பொய் செய்திகள் எப்படி பரப்பப்படுகிறது என்று. ஆனால், இதற்கு எதிராக இணையதளங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

பின்னர், தப்லீக் ஜமாத் தொடர்பான பொய்யான செய்திகளை தடுக்க அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. 

Tags : supreme court fake news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT