இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 1,378 பேருக்கு கரோனா தொற்று

2nd Sep 2021 05:49 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,378 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,378 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,16,680ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | நாட்டில் 54% பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்: மத்திய அரசு

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,877ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,139 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,88,101 அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் 26 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பலி

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 13,877 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andrapradesh Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT