இந்தியா

ராஜீவ் காந்தி நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை அழித்தொழித்துவிட முடியாது: பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் பதிலடி

2nd Sep 2021 04:05 PM

ADVERTISEMENT

அசாமில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ஒராங்கா தேசிய பூங்கா என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பெயரை மாற்ற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்திருந்தது. 

பெயர் மாற்ற விவகாரத்தில் அரசு அற்பத்தனமான நடந்து கொள்வதாக தெரிவித்த காங்கிரஸ், "அமைப்பு, பூங்காவின் பெயர்கள் மாற்றப்படுவதால் நவீன இந்தியாவை செதுக்கிய ராஜீவ் காந்தியின் பங்களிப்பை அழித்து ஒழித்துவிடமுடியாது. வரவாற்றை மாற்றி எழுத பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கும் செல்போன்கள், கணினிகள் யாவும் ராஜீவ் காந்தி கொண்டுவந்த ஐடி புரட்சியினால் அவர்களுக்கு கிடைத்தவையே ஆகும். 

இதையும் படிக்கதொடரும் பெயர் மாற்றும் படலம்: அசாம் தேசிய பூங்காவின் பெயர் மாற்றம்?

ADVERTISEMENT

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு, அரசு எடுக்கும் முடிவுகளில் இளைஞர்களை ஈடுபடு வைக்க வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 லிருந்து 18 ஆக குறைத்தது போன்ற பங்களிப்புகளை யாரால் அழித்து ஒழிக்க முடியாது" என விமர்சனம் முன்வைத்துள்ளது.  

Tags : Rajiv Gandhi congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT