இந்தியா

தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா

2nd Sep 2021 06:17 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தில்லி கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,839 ஆக உயர்ந்துள்ளது.

60,483 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 38 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,12,413 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 1,378 பேருக்கு கரோனா தொற்று

மொத்த பலி எண்ணிக்கை 25,082 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 344 ஆக உள்ளது.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,13,050

கடந்த 24 மணி நேரத்தில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள்: 79,906

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 33,144

இதுவரை மொத்தம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,36,16,193

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 97,21,721 

இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள்: 38,94,472

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT