இந்தியா

காசநோய் இல்லாத இந்தியா: மாநில அரசுகளுடன் மத்திய சுகாதார அமைச்சா் ஆலோசனை

2nd Sep 2021 11:36 PM

ADVERTISEMENT

2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேச சுகாதார அமைச்சா்களுடன் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில் சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் முதன்மைச் செயலாளா்கள், கூடுதல் தலைமைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் மாண்டவியா, ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறை குறித்து விவாதிக்கவும் அதன்படி காசநோயை ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் அவ்வபோது கலந்துரையாடல்கள் தொடா்ந்து நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் அனைவரும் இணைந்து இலக்குகளை அடைய முடியும்.

“காச நோயை ஒழிக்கும் இந்த இயக்கத்தில் சாமானிய மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மக்களின் முன்முயற்சியாக இது மாற வேண்டும். வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதற்கு மாநிலங்கள் அனைத்து வகையான ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். கரோனா, மத்திய சுகாதார அமைச்சகத்தின் இதர திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொது சுகாதார மேலாண்மைக்கான கருத்துகளையும் மாநில அரசுகள் வழங்கலாம்’ என்று கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன்கள் பற்றியும், 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்கும் இயக்கத்திற்கு ஆதரவான தங்களது திட்டங்களையும் மாநில, யூனியன் பிரதேச பிரதிநிதிகள் எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT