இந்தியா

காஷ்மீர் மாணவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மெஹபூபா முப்தி கடிதம்

30th Oct 2021 06:05 PM

ADVERTISEMENT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிக்க |  ‘உத்தரப்பிரதேசத்தில் மின்கட்டணக் கொள்ளையை ஒழிப்போம்’: பிரியங்கா காந்தி

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக தங்களது வாட்ஸ்ஆப் செயலியில் பாராட்டு தெரிவித்த காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க |  நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ காலநிலை மாநாடு

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கைது நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT