இந்தியா

எரிபொருள் விலை உயர்வால் 4,5 தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்: ராகுல் காந்தி

30th Oct 2021 03:43 PM

ADVERTISEMENT

எரிபொருள் விலை உயர்வை கண்டித்துள்ள ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக இன்று விமரிசித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கச்சா எண்ணெயின் விலை மிக அதிகமாக இருந்ததை அவர் குறிப்பிட்டு பேசினார்.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் தற்போது குறைவாக உள்ளபோதிலும் எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சர்வதேச எரிபொருள் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களை எட்டியது. 

இன்று, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள். இன்று உலகிலேயே இந்தியா எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கிறது. கூர்ந்து கவனித்தால், இதன் மூலம் 4-5 தொழிலதிபர்கள் பயனடைகின்றனர்.

சத்தீஸ்கரில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றினோம். பஞ்சாப், கர்நாடகாவிலும் போய் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எங்களின் தேர்தல் வாக்குறுதியில் எது வந்தாலும் அது ஒரு உத்தரவாதம், வாக்குறுதி மட்டுமல்ல" என்றார்.

ADVERTISEMENT

சமீபகாலமாக இந்தியாவில் எரிபொருள் விலை ஏறக்குறைய தொடர்ச்சியான விலை உயர்வைக் கண்டுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள், பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

நுகர்வோர் எரிபொருள்களின் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அக்டோபர் 29, வெள்ளிக்கிழமையன்று உச்சம் தொட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட தகவலின்படி, தேசிய தலைநகரில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து முறையே 108.64 ரூபாயாகவும் 97.37 ரூபாயாகவும் உள்ளது.

இதையும் படிக்கபுனித் ராஜ்குமார்: ரசிகர்கள் கொண்டாடிய அப்பு

விமான விசையாழி எரிபொருள் (ஏடிஎஃப் அல்லது ஜெட் எரிபொருள்) விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் விலையை விட இப்போது பெட்ரோல் விலை 37.52 சதவீதம் அதிகம். தில்லியில் விமான விசையாழி எரிபொருள் ஒரு லிட்டருக்கு சுமார் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT