இந்தியா

மேற்கு வங்கத்தில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை: கொல்கத்தா உயா்நீதிமன்றம் அதிரடி

30th Oct 2021 05:55 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நடப்பாண்டில் தீபாவளி, காளி பூஜை உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அனைத்து வகையான பட்டாசுகளையும் வெடிப்பதற்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

கரோனா பெருந்தொற்றுக்கு இடையே காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக இந்தக் கட்டுப்பாடு விதிப்பதாக அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.

அனைத்து வகை பட்டாசுகளுக்கும் விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, நீதிபதிகள் சவ்யசாச்சி பட்டாச்சாா்யா, அனிருத்தா ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க அனுமதிப்பது கரோனா பெருந்தொற்று சூழலை மேலும் மோசமாக்கும்; அத்துடன் காற்று மாசையும் அதிகரிக்கச் செய்யும் என்று மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, ‘பண்டிகை நாள்களில் குறிப்பிட்ட சில மணி நேரம், பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு தேசிய பசுமை தீா்ப்பாயமும் உச்சநீதிமன்றமும் அனுமதி அளத்துள்ளது’ என்று மாநில அரசு மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

ADVERTISEMENT

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தாலும், அந்தப் பட்டாசுகள்தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவது இயலாத காரியம்.

மேற்கு வங்கத்தில் நடப்பாண்டில் தீபாவளி, காளி பூஜை, சத் பூஜை, ஜகதாத்ரி பூஜை, குருநானக் பிறந்தநாள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்து பண்டிகை நாள்களிலும் அனைத்து வகையான பட்டாசுகளையும் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

வெடியொலி எழுப்பாத ஒளிரும் மத்தாப்பு முதல் அதிக சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் வரை வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, மெழுகு மற்றும் எண்ணெய் தீபங்களை வீடுகளில் ஏற்றி வைக்கலாம்.

பட்டாசுகள் வெடிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதிசெய்ய வேண்டும். மேற்கொண்டு பட்டாசுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் அளவுக்கு கண்காணிப்பை காவல் துறை தீவிரப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறுவோா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT