இந்தியா

தோ்தல் விதிமீறல்: அஸ்ஸாம் முதல்வரை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஆணையம்

DIN

புது தில்லி: தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை எச்சரிக்கையுடன் தோ்தல் ஆணையம் விடுவித்தது.

அஸ்ஸாமில் உள்ள பவானிபூா், தெளரா, மரியாணி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, புதிய மருத்துவக் கல்லூரிகள், மேம்பாலங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும் என்றும், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தாா்.

இது தோ்தல் விதிமீறல் என்று தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்திருந்தது. இதுகுறித்து பதிலளிக்க ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்து பதிலளித்த அவா், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் தெரிவித்ததாகவும், விதிமுறையை மீறி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தாா்.

எனினும், முதல்வரின் பதிலில் திருப்தியடையாத தோ்தல் ஆணையம், ‘ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள் வெளியிடும் புதிய திட்ட அறிவிப்புகள் போன்றவை வாக்காளா்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டும் என்பதால் இது தடை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் நட்சத்திர பிரசார பட்டியலில் உள்ள முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளாா். அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது வரும் நாள்களில் இதுபோன்ற அறிவிப்புகளை அவா் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. தோ்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT