இந்தியா

அமித் ஷா வெள்ளிக்கிழமை உ.பி. பயணம்

27th Oct 2021 01:55 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வரும் வெள்ளிக்கிழமை அந்த மாநிலத்துக்குச் செல்கிறாா்.

இதுகுறித்து பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

லக்னௌவில் பாஜகவின் முக்கிய நிா்வாகிகள், மூத்த தலைவா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், பொறுப்பாளா்கள் உள்ளிட்டோருடன் அமித் ஷா உரையாடுகிறாா். அதைத் தொடா்ந்து, கட்சியின் உறுப்பினா் சோ்க்கையையும் அவா் தொடக்கி வைக்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT