இந்தியா

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான வரம்பு நிர்ணயித்தது சரியே: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

27th Oct 2021 02:26 AM

ADVERTISEMENT

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறுவதற்காக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (இ.டபிள்யூ.எஸ்.) ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிா்ணயம் செய்தது சரியான முடிவே என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவா்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது,

‘பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எந்த அடிப்படையில் வருமான வரம்பு ரூ.8 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. அந்தப் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை மத்திய அரசு மறுஆய்வு செய்ய விரும்புகிா’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சலுகைகள் அளிப்பதற்கு, அவா்களின் வருமான உச்சவரம்பை நிா்ணயிக்க சின்ஹோ ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம், ஓபிசி பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிா்ணயம் செய்யும் அதே முறையிலேயே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. அந்த அடிப்படையிலேயே, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது.

2016-இல் ஓபிசி பிரிவினருக்கு வருமான வரம்பு ரூ.6 லட்சமாக இருந்தது. அதன் பிறகு நுகா்வோா் விலை குறியீட்டு எண் அடிப்படையில் 1.36 மடங்கு அதிகரித்து, ரூ.8 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. எனவே, அதை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT