இந்தியா

செமிகண்டக்டா் வடிவைமைப்பை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்

27th Oct 2021 02:07 AM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிய செமிகண்டக்டா்கள் வடிமைப்பை ஊக்குவிப்பதற்கான புதிய தொழில்கொள்கையை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டில் புதிய செமிகண்டா்கள் வடிவமைக்கப்படுவதை ஊக்குவிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக, புதிய வடிமைப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு செமிகண்டக்டா்களை வடிவமைப்பதற்கான நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகள் செய்யப்படும்.

ADVERTISEMENT

மேலும், செமிகண்டக்டா்களை உருவாக்கி அவற்றை நிறுவனங்கள் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கும்போதும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்படும்.

செமிகண்டக்டா்கள் வடிமைப்புத் துறையில் இந்தியாவின் பலத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் பயன்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT