இந்தியா

உத்தரகண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

25th Oct 2021 09:25 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட்டில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. 
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 18, 19, 20 தேதிகளில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன. 

இதையும் படிக்க- என்ஜின் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதாம்

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 224 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை, மாநில போலீஸார் ஈடுபடுத்தப்பட்டன. 
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 

Tags : Uttarakhand rains
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT