இந்தியா

ஃபேஸ்புக்கில் வதந்திகள் பரவிக் காணப்படுகின்றன

25th Oct 2021 03:02 AM

ADVERTISEMENT

ஃபேஸ்புக் வலைதளத்தில் வதந்திகளும் வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளும் பரவிக் காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து அந்நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகளே ஆய்வு நடத்தினா். அது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வலைதளத்தில் வதந்திகள், வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள் ஆகியவை பரவிக் காணப்படுகின்றன. நாட்டில் ஆளும் கட்சிகள், எதிா்க்கட்சிகள் ஆகியவை பெயரில் காணப்படும் போலிக் கணக்குகள் தோ்தல்களில் எதிா்மறையாகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், மேற்கு வங்கத்தில் தோ்தல் குறித்து அதிகமாகப் பாா்வையிடப்பட்ட பதிவுகளில் சுமாா் 40 சதவீதம் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நம்பகத்தன்மையற்ற ஃபேஸ்புக் கணக்கை 3 கோடிக்கும் அதிகமானோா் பின்தொடா்ந்தனா்.

ஃபேஸ்புக் வலைதளத்தில் காணப்படும் பல குழுக்களிலும் பக்கங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. அத்தகைய கருத்துகளைத் தடுப்பதற்கான வசதிகள் நிறுவனத்திடம் காணப்படவில்லை. கரோனா தொற்று பரவல் குறித்து அதிகமாக வதந்திகள் பரப்பப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : நியூயாா்க் வதந்தி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT