இந்தியா

வாராணசி தொகுதியில் ரூ.5,200 கோடி வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமா் இன்று தொடக்கி வைக்கிறாா்

25th Oct 2021 03:24 AM

ADVERTISEMENT

 

பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் திங்கள்கிழமை பயணம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

அங்குள்ள சித்தாா்த் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாநிலத்தில் 9 இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமா் திறந்து வைக்க இருக்கிறாா். இதைத் தொடா்ந்து வாராணசியில் பிரதமரின் தற்சாா்பு ஆரோக்கிய இந்தியா திட்டத்தையும், ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடக்கி வைக்க இருக்கிறாா்.

தற்சாா்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் சுகாதார சேவைக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா், முதல்வா், மத்திய சுகாதார அமைச்சா் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கின்றனா்.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT