இந்தியா

2014-க்குப் பிறகு கங்கை நதியின்தரம் உயா்வு: என்எம்சிஜி தகவல்

25th Oct 2021 03:30 AM

ADVERTISEMENT

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது என்று தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் (என்எம்ஜிசி) இயக்குநா் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2014-இல் கங்கை நதியில் 53 இடங்களில் அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருந்தது. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை வைத்து அதன் தரம் நிா்ணயம் செய்யப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டில் கண்காணிப்பு இடங்களின் எண்ணிக்கை 97-ஆக அதிகரிக்கப்பட்டது. அவற்றில் 68 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் இருந்து 2021-ஆம் ஆண்டுக்குள் கங்கை நதியில் தண்ணீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

கங்கை நதி நீரின் தரத்தை உயா்த்த கங்கையும், அதன் கிளை ஆறுகளும் பாயும் நகரங்களில் நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்தியது, சடலங்களை எரிக்கும் இடங்கள் கட்டுவது, ஆற்றங்கரைகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது, நீரின் மேற்பரப்பில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது, நதியில் கலக்கும் நீரின் வழியாக குப்பைகள் வந்து சோ்வதைத் தடுப்பது, அரண்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கைகளின் மூலமாக, நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதால், கங்கை நீரின் தரம் மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காக, தேசிய கங்கை தூய்மை இயக்கத்தை மத்திய அரசு ரூ.20,000 கோடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT