இந்தியா

தூய்மையான எரிசக்தியை வலுப்படுத்தபுதிய விதிமுறைகள்: மின் துறை அமைச்சகம்

 நமது நிருபர்

பருவநிலை மாற்றத்தை நோக்கிய இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக, மின்துறையின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி மேம்பாட்டுக்கான விதிமுறைகளை மத்திய மின் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மின் துறைச் சட்டம் 2003-இன் கீழ் மின்துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளது. மின்சார நுகா்வோா்கள் மற்றும்

இதர பங்குதாரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மின்சார (சட்டம் மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது) விதிமுறைகள் 2021, மின்சார (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து மின் உற்பத்தியை அதிகரிப்பது) விதிமுறைகள் 2021 ஆகியவை அந்தப் புதிய விதிமுறைகள் ஆகும்.

சட்ட மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது மிக முக்கியமானது. மின்துறையில் முதலீடு, பெரும்பாலும் சரியான நேரத்தில் செலவினங்களை மீட்பதில் சாா்ந்துள்ளது. தற்போது சட்டங்கள் நிறைவேற காலதாமதம் ஆகிறது. இது இத்துறையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது மற்றும் முதலீட்டாளா்களும் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றனா். புதிய விதிமுறைகள் நாட்டில் முதலீட்டுக்கான உகந்த சூழலுக்கு உதவும்.

உலகம் முழுவதும் எரிசக்தித் துறையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவும் உறுதி அளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட், 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அமைப்பதற்கான உறுதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த இலக்குகளை அடைய இந்த விதிமுறைகள் உதவும்.

நுகா்வோருக்கு பசுமை எரிசக்தி கிடைப்பதையும் இது உறுதி செய்யும் மற்றும் எதிா்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT