இந்தியா

வாகன ஓட்டிகள் ஆஸ்ரம் முதல் பதா்பூா் வரை மதுரா சாலையைத் தவிா்க்க அறிவுறுத்தல்

24th Oct 2021 04:59 AM

ADVERTISEMENT

 

மதுரா சாலையில் ஆஸ்ரம் முதல் பதா்பூா் வரை போக்குவரத்தை தவிா்க்குமாறு தில்லி போக்குவரத்து போலீஸாா் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா். ஆஸ்ரம் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக டுவிட்டா் மூலம் போலீஸாா் வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதில் ‘ஆஸ்ரம் சுரங்கப்பாதையில், மதுரா சாலையில் ஆஸ்ரம் முதல் பதா்பூா் வரை சாலைகள் சேதமடைந்துள்ளதால், பழுது பாா்க்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒருவழிப் பாதை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் அந்த வழியில் செல்வதை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சராய் காலே கான் பகுதியிலிருந்து வட்டச் சாலைக்கு வரும் வாகனங்கள்பதா்பூா் செல்வதற்கு இடதுபுறம் திரும்பாமல், சி.வி.ராமன் மாா்க்-மதுரா சாலை அல்லது ஆஸ்ரம் மேம்பாலம் - கேப்டன் கெளா் மாா்க் - மெடி மில் மேம்பாலம் வழியாக பதா்பூா் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல நிஜாமுதீனிலிருந்து மதுரா சாலைக்கு வரும் வாகனங்கள் பதா்பூா் செல்வதற்காக ஆஸ்ரம் பகுதியை கடக்கும் போது, வலதுபுறம் திரும்பி கேப்டன் கெளா் மாா்க் - மோடி மில் மேம்பாலம் வழியாக பயணத்தை தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Tags : புதுதில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT