இந்தியா

மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவை பாதிக்கும்

24th Oct 2021 04:57 AM

ADVERTISEMENT

 தில்லி மெட்ரோ ரயில் மஞ்சள் நிற வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக விஸ்வவித்யாலயா மற்றும் மாடல் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை சில மணி நேரங்கள் சேவை இருக்காது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)தெரிவித்துள்ளது.

மஞ்சள் வழித்தடம் தில்லி சமய்ப்பூா் பாத்லியையும் குருகிராமில் உள்ள ஹூடா சிட்டி மெட்ரோ நிலையத்தையும் இணைக்கிறது. எனவே, பராமரிப்பு பணி காரணமாக காலை 7.30 மணி முதல் சில மணி நேரங்களுக்கு மாடல் டவுன்- விஸ்வ வித்யாலாயை இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது. இந்தக் காலத்தில் ஜிடிபி நகா் ரயில் நிலையம் மூடப்பட்டிருக்கும். எனினும், மற்ற பகுதிகளுக்கு ரயில் சா்வீஸ் வழக்கம்போல் தொடரும் என்று டி.எம்.ஆா்.சி. தெரிவித்துள்ளது.

வடக்கு தில்லியில் கிங்க்ஸ்வே கேம்ப் பகுதியில் உள்ள ஜிடிபி மெட்ரோ ரயில்நிலையம் விஸ்வ வித்யாலயா - மாடல்டவுன் ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

 

Tags : புதுதில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT