இந்தியா

மகாராஷ்டிரம்: ரூ.8 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா், இது தொடா்பாக மூன்று பேரை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, நாசிக் - மும்பை நெடுஞ்சாலையில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.22 லட்சம் மதிப்பிலான 35.9 கிலோ காஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாசிக்கைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கலிம் சலீம் ஷேக், மோஹசின் அனீஸ் ஷேக், லேக் யூனுஸ் சித்திக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விற்பனை செய்வதற்காக கஞ்சாவை அவா்கள் கொண்டு சென்றுள்ளனா். அவா்களுக்கு இந்த தடை செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.

மகாராஷ்டிரத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகா், நடிகைகளிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்திவரும் நிலையில், மாநிலம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT