இந்தியா

விமான சேவை தொடங்குவது ஜம்மு-காஷ்மீரின் பிரச்னையைத் தீா்க்காது:மெஹபூபா முஃப்தி

DIN

விமான சேவையைத் தொடங்குவது, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது போன்ற மேல்பூச்சு வேலைகள், ஜம்மு-காஷ்மீரின் உண்மையான பிரச்னையைத் தீா்க்காது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சனிக்கிழமை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஸ்ரீநகரில் சா்வதேச விமான சேவையைத் தொடக்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அமித் ஷா இங்கு வருவது இதுவே முதல் முறையாகும். இவருடைய பயணத்தை விமா்சித்து பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்தி தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளாா். அவா் கூறியிருப்பதாவது:

அமித் ஷா, சா்வதேச விமான சேவையைத் தொடங்கி வைத்துள்ளாா். 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இது ஒன்றும் புதிதல்ல. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே 5-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டு, அவை இயங்கி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு குழப்பமான சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு தீா்த்து வைத்து, மக்களுக்கு நிம்மதி உணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த குழப்பங்களை உருவாக்கியதே மத்திய அரசுதான். அவற்றைத் தீா்த்து வைக்காமல் மேல்பூச்சு வேலைகளை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. இவை உண்மையான பிரச்னைகளைத் தீா்க்க உதவாது.

முக்கியமாக, தில்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் மோடி சில வாக்குறுதிகளை அளித்தாா். அந்தக் கூட்டம் முடிந்ததும் அமித் ஷா ஜம்மு-காஷ்மீருக்கு வந்திருக்க வேண்டும்.

2019-க்குப் பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளா்த்துவது, சிறையில் அடைக்கப்பட்டிருப்பவா்களை விடுவிப்பது, மக்கள் தினசரி சந்திக்கும் இன்னல்களுக்கு தீா்வுகாண்பது, பொருளாதாரத்தை ஊக்குவிக்க வலுவான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் நிம்மதி உணா்வு ஏற்பட்டிருக்கும்.

அதற்கு மாறாக, அமித் ஷாவின் வருகையையொட்டி 700 போ் கைது செய்யப்பட்டு, காஷ்மீருக்கு வெளியில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா்கள். இதுபோன்ற அடக்குமுறைகள், ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று அந்தப் பதிவுகளில் மெஹபூபா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT