இந்தியா

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

24th Oct 2021 09:24 AM

ADVERTISEMENT

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது காா் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். பின்னா் நடைபெற்ற வன்முறையில் காா் ஓட்டுநா், இரண்டு பாஜக தொண்டா்கள், ஒரு பத்திரிகையாளா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச போலீஸாரின் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க- மாமியார் - மருமகள் உறவு மேம்பட...மனநல மருத்துவர் கூறும் ஆலோசனைகள்!

இதையடுத்து, மத்திய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், ஆசிஷ் மிஸ்ரா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு டெங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும் ஆசிஷ் மிஸ்ராவின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lakhimpur Kheri violence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT