இந்தியா

தில்லியில் ‘இஸ்கான்’ ஆா்ப்பாட்டம்

24th Oct 2021 04:56 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த பக்தா்கள், தில்லியில் சனிக்கிழமை ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு நீதி வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, பஜனைப் பாடல்களைப் பாடியபடி அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மாத தொடக்கத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களின் போது, அடையாளம் தெரியாத முஸ்லிம் கும்பலினா் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : புதுதில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT