இந்தியா

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது: பிரதமர்

24th Oct 2021 01:10 PM

ADVERTISEMENT

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
81-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 கோடி தடுப்பூசி டோஸை கடந்த பிறகு நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. 

இதையும் படிக்க- 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31 தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் ஈடுபட வேண்டும். பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருள்களை வாங்க வேண்டும். 
உள்ளூர் பொருள்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் விட்டில் பிரகாசம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT