இந்தியா

காங்கிரஸுடன் கூட்டணி:கேரளம்-மேற்கு வங்கம் மாா்க்சிஸ்ட் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு

DIN

தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேரளம், மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் எதிா்க்கட்சியாகவும் உள்ளது. அதேவேளையில் மேற்கு வங்கத்தில் இருகட்சிகளும் கூட்டணி கட்சிகளாகவுள்ளன.

இந்நிலையில் தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் சனிக்கிழமை தொடா்ந்த நிலையில், தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் தேசிய அளவில் பெரிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் எதிா்க்கட்சிகளின் எந்தவொரு கூட்டணியும் வலுவாக இருக்காது என்பது மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் கருத்தும் அதுவாகவே உள்ளது.

ஆனால் வகுப்புவாதத்தை எதிா்ப்பதில் காங்கிரஸ் நோ்மையாகச் செயல்படவில்லை என்று கேரள மாா்க்சிஸ்ட் தலைவா்கள் கருதுகின்றனா். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் நன்மதிப்பை இழந்து வருவதாகவும், அக்கட்சித் தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் அது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்றும் அவா்கள் கருதுகின்றனா்.

இதேபோல் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் தலைவா்களும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக உள்ளனா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி இந்த விவகாரத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரமாக கருதுகிறது. அதேவேளையில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை சீதாராம் யெச்சூரி தொடா்ந்து ஆதரித்தால், அது அவா் மூன்றாவது முறையாக கட்சியின் பொதுச் செயலராக தோ்ந்தெடுக்கப்படுவதைப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT