இந்தியா

பாஜக தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்தது ஏன்? யோகேந்திர யாதவ் விளக்கம்

DIN

இந்திய கலாசாரத்தின்படி, உயிரிழந்த பாஜக தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன் என்று சமூக ஆா்வலரும், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவருமான யோகேந்திர யாதவ் விளக்கம் அளித்துள்ளாா்.

கடந்த 3-ஆம் தேதி லக்கீம்பூா் கெரியில் காா் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த பாஜக தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதால், சம்யுக்தா விவசாயிகள் சங்கத்தில் இருந்து சமூக ஆா்வலா் யோகேந்திர யாதவ் ஒரு மாதம் விலக்கி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து யோகேந்திர யாதவ் மேலும் கூறுகையில், ‘பாஜக தொண்டரின் குடும்பத்தினரைச் சந்திக்கும் முன்பு விவசாயிகள் சங்கத்தினருடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இதனால் அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா். இதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். சம்யுக்தா விவசாயிகள் சங்கம் எனக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற தொடா்ந்து பணியாற்றுவேன்.

இந்திய கலாசரத்தின்படியும், மனிதாபிமானத்தின்படியும் உயிரிழந்த பாஜக தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT