இந்தியா

தில்லியில் 664 பழைய வாகனங்கள் பறிமுதல்: 300-ஐ அழிக்கும் பணி தொடக்கம்

DIN

தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பழைமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு பழைமையான பெட்ரோல் வாகனங்களும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரையில் மொத்தம் 664 பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 300-க்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்மாதத்தில் 20-ஆம் தேதி வரையில் மட்டும் தில்லியில் 270 டீசல், பெட்ரோல் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கான பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த வாகனங்களை இயக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பா் மாதம் வரையில் 394 பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 132 டீசல், 262 பெட்ரோல் வாகனங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜூன் மாதத்தில் இருந்து இந்தப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள 1 கோடி வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் உள்பட சுமாா் 37 லட்சம் வாகனங்கள் பழைய வாகனங்களாக உள்ளன. இவற்றை இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த பழைய வாகனங்களை பறிமுதல் செய்து வைக்க தேவையான இடம் இல்லாததாலும், இவற்றை உடனடியாக அழிக்க தேவையான வசதி இல்லாததாலும் அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT