இந்தியா

என்சிபி அலுவலர்கள் மீது ஆர்யன் கான் பரபரப்பு குற்றச்சாட்டு; ஜாமீன் மனுவில் விளக்கம்

23rd Oct 2021 11:42 AM

ADVERTISEMENT

சொகுசு கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில், ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், தனது வாட்ஸ்அப் உரையாடல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தவறான முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது முற்றிலும் நியமற்ற ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களுக்கு முன் நடந்த ஒரு வாட்ஸ்அப் உரையாடலை இச்சம்பவத்துடன் தொடர்புப்படுத்துவது சரியானது அல்ல என்றும் கூறியுள்ளார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தன்னை கைது செய்தபோது போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் கப்பலில் இருந்தவர்களில் இருவரைத் தவிர வேறு யாரையும் தனக்குத் தெரியாது என்றும் ஆர்யன் கான் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செல்வாக்கு மிக்க நபராக இருப்பதாலேயே, அவர் ஆதாரங்களைச் சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என சட்டத்தில் கூறவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தன்னை சிக்க வைக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இது தொடர்பாகப் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று விசாரணை நடத்தினர். 

அப்போது அனன்யா பாண்டே தான் ஒருபோதும் போதை மருந்து உட்கொள்ளவில்லை, ஆர்யனுடனான வாட்ஸ்அப் உரையாடல் நகைச்சுவையாக செய்யப்பட்டது என்றார். 

இதையும் படிக்கபோதைப் பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக்‍கான் வீட்டில் போ​லீசார் அதிரடி சோதனை

மும்பை கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அவா்கள் மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மும்பை உயா்நீதிமன்றத்தில் ஆா்யன் கான் சார்பில் கடந்த 20-ஆம் தேதி மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 


 

Tags : NCB Shah Rukh Khan Aryan Khan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT