இந்தியா

ஏவுகணை சோதனைக்கு வான் இலக்காக பயன்படும் விமானம் வெற்றிகர சோதனை

23rd Oct 2021 07:18 AM

ADVERTISEMENT

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் உருவாக்கப்பட்ட அதிவேக ‘அப்யாஸ்’ இலக்கு விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனையின்போது இலக்காக இந்த விமானம் பயன்படுத்தப்படும்.

ஒடிஸா மாநிலம், சண்டிபூா் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் டிஆா்டிஓ-வின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்தில் (ஐடிஆா்) இந்த இலக்கு விமானத்தின் சோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்யாஸ் சோதனை வெற்றி பெற்றதைத் தொடா்ந்து டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து டிஆா்டிஓ அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூருவில் உள்ள டிஆா்டிஓ அமைப்பின் விமான மேம்பாட்டுப் பிரிவு (ஏடிஇ) மூலமாக இந்த இலக்கு விமானம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த இலக்கு விமானம் வேகமாகச் செல்லும் வகையில் உந்துதல் அளிப்பதற்காக அதில் இரட்டை பூஸ்டா்கள் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலக்கு விமானம் நீண்ட தூரம் மற்றும் நீடித்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக அதில் கேஸ் டா்பைன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இதை கட்டுப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுவதற்காக கட்டுப்பாட்டு கணினியுடன் கூடிய வழிகாட்டுதல் தொழில்நுட்பமும் இந்த இயந்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி ரேடாா் மற்றும் எல்க்ட்ரோ ஆப்டிகல் கணிகாணிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொலையுணா்வு மற்றும் சென்சாா் கணிப்பு தொழிநுட்பங்கள் உதவியுடன் மடிக்கணினி மூலமாக கண்காணிக்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றியடைந்துள்ளது என்று அவா்கள் கூறினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT